மூத்த மொழி
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்று போற்றப்படும் இனம் தமிழ் இனம். உலக மொழிகளில் மூத்தமொழி என்று அழைக்கப்படுவதும் நம் தமிழ் மொழி.
எழுத்து மொழி
ஒரு மொழியின் நிலைத்த பெருமைக்கும் வளர்ச்சிக்கும் காரணம் அம்மொழி எழுத்து மொழியாக நின்று நிலைபெற்று இருப்பதுவே. வெறும் பேச்சு மொழியாக இருக்கக்கூடிய மொழிகள் எவையும் நிலைத்து நிற்பதில்லை என்பதற்கு உலகில் உள்ள பல்வேறு இனத்தின் மொழிகள் சான்றாக அமைகின்றன. அவ்வகையில் தமிழ்மொழி இன்றளவும் செம்மாந்து நிற்பதற்குக் காரணம் அதன் எழுத்து மொழியே ஆகும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்மொழி எழுத்துக்கள்
தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஆய்தஎழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இது நாம் அறிந்ததே.
எழுத்துரு அல்லது வரிவடிவம்
தமிழ் எழுத்துக்கள் 247 இருப்பினும் அவற்றை எழுதக்கூடிய வரிவடிவங்களில் எண்ணற்ற வேறுபாடுகள் இருக்கின்றன. அத்தகைய எழுத்துக்களின் வரி வடிவங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள் மொத்தம் 18. ஆனால் அதன் எழுத்துருக்களோ மொத்தம் 36.
ஒவ்வொரு மெய்யெழுத்தும் இரண்டு எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன. அதாவது 'க' என்ற எழுத்தின் மேலே உள்ள புள்ளியையும் சேர்த்து மொத்தம் இரண்டு எழுத்துருக்கள் என்று கணக்கிடப்படுகின்றன.
அங்ஙனம் மெய் எழுத்துக்கள் மொத்தம் 36 எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன என்பது தெரிகிறது.
உயிர் மெய் எழுத்துக்கள்
உதாரணமாக,
உயிர்மெய் எழுத்துக்களின் வரிசையில், 'க' முதல் 'கௌ' வரையிலான எழுத்து வரிசையில் உள்ள 12 எழுத்துக்களில்,
'க' மற்றும் 'கு' தவிர, 'கை' வரை உள்ள எழுத்துக்கள் இரண்டு எழுத்துருக்களை பெற்றிருப்பதைக் காணலாம். 'கொ', 'கோ', 'கௌ' ஆகிய எழுத்துக்கள் 3 எழுத்துருக்களைப் பெற்றிருப்பதை காணலாம்.
இங்ஙனம் 'க' முதல் 'கௌ' வரையிலான எழுத்து வரிசையில் மொத்தம் 25 எழுத்துருக்கள் உள்ளன.
இது போன்றே ட, ர, ழ, ள, ஆகிய எழுத்துக்களும் 25 எழுத்துருக்களை பெற்றிருக்கின்றன.
மேலும், மேற்கண்ட எழுத்துக்களைத் தவிர்த்த மற்ற எழுத்துக்கள் அனைத்தும் அவ்அவ் வரிசையில் மொத்தம் தலா 27 எழுத்துருக்களைப் பெற்றிருக்கின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் மேற்கண்ட க, ட, ர, ழ, ள ஆகிய எழுத்துக்களில் உகரம் ஓர் எழுத்துருவை மட்டுமே பெற்றுவரும். ஆனால் மற்ற எழுத்துக்கள் அனைத்திலும் உகரமும் 2 எழுத்துருக்களைப் பெற்று வரும்.
அவ்வகையில், உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 476 எழுத்துருக்களைப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.
இவ்வாறு தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்து 16 மெய்யெழுத்து 36 உயிர்மெய் எழுத்து 476 ஆயுதம் 1 என மொத்தம் 529 எழுத்துருக்களைப் பெற்று அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






4 கருத்துகள்:
அனைத்தும் ஒப்புக்கொள்ளத்தக்கது. க், ங்., புள்ளி சேர்த்து எழுதுவது போல் ஆய்த எழுத்திலும் மூன்று புள்ளிகள் உள்ளனவே அவற்றை மூன்று எழுத்தாக எழுத கூடாதா ????
சிறப்பு அம்மா
உங்கள் கருத்திற்கு நன்றி. அதாவது நாம் தட்டச்சு செய்யும் போது ஃ எனும் எழுத்து ஓர் எழுதுதுருவாகவே அமைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். மற்ற எழுத்துக்களைப் போல் ஃ மூன்று வரிவடிவம் பெற்றது என்று கூற இடமில்லை.
சிறப்பு அம்மா
கருத்துரையிடுக