மடை
ஏரி குளம் கண்மாய்களில் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் பொழுது அந்த நீரை திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்ட சிறிய வாசல் போன்ற பகுதி அமைப்பதுண்டு. அவருக்கு கதவும் உண்டு. இக் கதவு மறுத்தாலோ அல்லது இரும்பினால் செய்யப்பட்டு இருக்கும். அந்த சிறிய துவாரத்திற்கு மடை என்று பெயர்.
மழைக்காலத்தில் இந்த மடையின் கதவினைத் திறப்பதற்கென்றே சிலர் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்கள் படையைத் திறப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்.
இத்தகைய தொழிற் பெயராக விளங்கக்கூடிய மடையன், மடையர் எனும் சொற்கள் இன்று அறிவில்லாதவர், மூளை இல்லாதவர், அறிவைப் பயன்படுத்தாதவர், மூளையைப் பயன்படுத்தாதவர் என்னும் பொருளைக் குறிக்க கூடிய சொல்லாக மாறி வழங்கப்படுகின்றது.
முட்டுக்கட்டை
பொதுவாக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்கு யாராவது தடைக்கற்களாக இருந்தார்கள் என்றால், ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறாய் என்று கேட்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தகைய முட்டுக்கட்டை என்பது என்ன? திருவிழாக்காலங்களில் தேர் இழுப்பது வழக்கம். இந்தத்தேர் தெருவிலே நிதானமாகவும் தடம் புரளாமலும் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்று பெயர். தேரானது தெருவிலே திரும்பும்பொழுது தேரின் சக்கரத்தில் ஒரு கட்டையைக் கொடுத்து அதனை லாவகமாகத் திருப்புவதற்கு முயற்சி செய்வார்கள். அவ்வாறு தேரைத் திருப்புவதற்குப் பயன்படுத்தக்கூடிய கட்டைக்கு முட்டுக்கட்டை என்றும்;
அந்தக் கட்டையைக் கொடுத்து லாவகமாகத் தேர் திரும்புவதற்கு உதவியாக இருக்கக்கூடிய நபருக்கு முட்டாள் (முட்டுக்கொடுக்கும் ஆள்) என்றும் பெயர். ஆனால் இன்று முட்டாள் என்னும் சொல்லானது அறிவில்லாதவன், மூளை இல்லாதவன் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கின்றது. காரணம் முட்டுக்கொடுக்கும் ஆள் தேரினுடைய ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் மிகவும் சாதுரியமாக அந்தக் கட்டையை வைத்து அது சரியான பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முதலில் அந்த நபருக்கு உடல் பலமும் அறிவுத் திறனும் இருக்க வேண்டும். அந்நபர் புத்திசாலியாக இருந்தால் தான் அவரால் தேரை சரியான தடத்தில் செல்ல வைக்க முடியும். ஆனால் இன்று இவ்வரிய சொல்லானது பொருள் மாறிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது வருத்தத்துக்குரியது.
தொடரும்.,



3 கருத்துகள்:
அம்மா என்று தான் இந்நிலை மாறி தமிழ் இயல்பாக இயங்கும் அம்மா
தெரியவில்லையே கண்ணே
சிறப்பு அம்மா.. இதுபோன்ற சொற்களின் விளக்கங்களை தொடர்ந்து தாருங்கள்..
கருத்துரையிடுக